திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரைப்பட பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார். அப்போது செதியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் காலமான மாரிமுத்து தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், திரைத்துறையினர் தங்களது உடலை பொருட்படுத்தாமல் இருப்பதும், அவர்களின் வேலைப்பளு மற்றும் மன அழுத்தமே சமீபத்திய உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.