மத்திய வெளியுறவு செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் திடீர் கடிதம் | Thanthitv
குவைத்தில் கைதான ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவு செயலாளருக்கு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் விடுதலைக்காக கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.