வடமேற்கு சிரியாவில் பள்ளி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்திற்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். இட்லிப் நகரின் மேற்கில் உள்ள டார்குஷ் நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.