எமனாய் மாறிய மே மாத மழை.. உறங்கியபடி உயிரிழந்த பரிதாபம் | Salem | Rain | Thanthitv

Update: 2024-05-23 12:25 GMT

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் தொடர் கனமழை எதிரொலியாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ப்ளாஸ்டிக் குடோனில் பணி புரிந்து வரும் 55 வயதான செந்தமிழ் என்பவர், பணி முடிந்து இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். ஏற்கனவே கனமழையால் வீட்டின் சுவர்கள் ஈரப்பதத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த செந்தமிழனை மீட்டனர். அப்போது, தலை மற்றும் வயிற்று பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்