"10 நாளாச்சு..ஒரு நடவடிக்கையும் இல்ல"கடலில் விழுந்து மாயமான மீனவர் | Ramanathapuram

Update: 2024-11-25 10:47 GMT

ராமநாதபுரத்தில், கடலில் விழுந்து மாயமான மீனவரை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தை அடுத்த புதுரோடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷ், கடந்த 17-ம் தேதி, அருண்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீனவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மீனவரின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மீனவரின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்