அடுத்த 25 ஆண்டுகளில் ராமராஜ்ஜியமாக இந்தியா மாற வேண்டும்" - ஆர்.என்.ரவி | RN Ravi
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில், சென்னையில் அயோத்யா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலங்களவை எம்.பி. இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுர், இராமர் இல்லாத பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது என்றும், வெவ்வேறு மொழி பேசும் நபர்களிடமும் ராமர் குறித்த கதைகள் இருக்கின்றன என்றும் கூறினார். வேகமாக வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா விரைவில் 3-ஆவது இடத்திற்கு முன்னேறும் என்றும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, ராம ராஜியமாக மாற அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.