கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவது தொடர்பான செய்திகள் பரவி வரும் நிலையில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவது தொடர்பான செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றக்கூடாது என வலியுறுத்தி வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான வியாபாரிகள், வணிகர்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். இன்னும் 15 நாட்களில் இது தொடர்பாக அரசு பதிலளிக்கவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.