உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தீவிரமாக பிரசாரம் செய்தார். ரேபரேலியில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்த தனது பாட்டியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது ரேபரேலி உடனான தங்கள் உறவு 100 ஆண்டுகள் பழமையானது என நெகிழ்ந்தார். பிரதமர் மோடி அதானி அம்பானிக்காகவே வேலை பார்க்கிறார் என விமர்சனம் செய்த ராகுல் காந்தி, மோடியால் 22 மில்லியனர்களை உருவாக்க முடியும் என்றால், தங்களால் லட்சக்கணக்கான மில்லியனர்களை உருவாக்க முடியும் என்றார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஏழை விவசாயிகளின் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறிய ராகுல் காந்தி, ஏழை தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படும் எனவும் கூறினார்.