முன்னதாக, கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் மோடி, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி, வி.எஸ்.எஸ்.சி.யில் 'ட்ரைசோனிக் காற்று இயக்க சுரங்கம்' ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அவர் ஆய்வு செய்கிறார்