போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அலறி வெளியே ஓடிய விசாரணைக்கு வந்த நபர்.. - அதிர்ச்சி பின்னணி
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர் அடித்து துன்புறுத்தப்படுவதாக பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர் காவல்நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்று உள்ளனர்.
அப்போது காவல்நிலையத்தினுள் ஒருவரை கடுமையாக தாக்குவது போன்று அலறல் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போலீசாரிடம் இது குறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்மந்தப்பட்ட நபர் போலீசார் தன்னை தாக்குவதாக வெளியே ஒடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.