ஊட்டியை நோக்கி படையெடுக்கும் மக்கள் - இதுதான் காரணமா..?

Update: 2024-02-04 11:33 GMT

ஊட்டி கெர்ன்ஹில் தோட்டக்கலை பூங்காவில் மலைமுகடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தொங்குபாலத்தில் சுற்றுலா பயணிகள் விடுமுறையை ஒட்டி குவிந்தனர். 100 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தொங்கு பாலத்தில் சென்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் ஊற்றுக்கள் மற்றும் பசுமைக் குடிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். வார விடுமுறை என்பதால் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ஆகிய சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்