தென் மாவட்டங்கள் மீது விழுந்த கண்... அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள்

Update: 2024-11-24 08:02 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்...தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நெல்லை, குமரி, தென்காசியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஒரு வார காலமாக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியலும் அதிகாரிகள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகம் வழியாக கனிம வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்கள் 50 சதவீத பசுமை வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்பு தான் கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றனவா எனவும் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, எட்டையபுரம் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஒரு லாரியில் எம். சாண்ட் கொண்டுச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்