"தனித்தீவாக மாறி மிதக்கும் ரூ.90 கோடி...திறப்பு விழா காணாமலே இந்த நிலை" - கொதிக்கும் மக்கள்
ராமநாதபுரத்தில் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் பட்டாலியன் குடியிருப்பு பகுதிகளை ஐந்து நாட்களாக மழை நீர் சூழ்ந்துள்ளது.
சமீபத்தில் கனமழையால் ராமநாதபுரத்தில் 79 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்பட்ட 12வது பட்டாலியன் படை குடியிருப்பு பகுதிகள் தனித்தீவாக மாறியுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் குடியிருப்புகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், அங்கு இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 90 கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட்ட போலீசார் குடியிருப்பை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.