ஊட்டியில் குவிந்த 80,000 ரோஜாக்கள்.. கண்களை பறிக்கும் கலர் கலர் பூக்கள்.. பிரம்மாண்ட விலங்குகள்
தாவரவியல் பூங்காவை தொடர்ந்து உதகை அரசு ரோஜா பூங்காவிலும் 19-வது ரோஜா கண்காட்சியும் தொடங்கியது.
தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தொடங்கி வைத்தார்.
ரோஜா கண்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 80,000 ரோஜா மலர்களைக் கொண்டு வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டு எருமை, மான், நீலகிரி வரையாடு, புலி, பாண்டா கரடி, ஆந்தை, புறா போன்ற வடிவங்கள் SAVE WILD LIFE என்ற கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது.
இதில் சுமார் 20 ஆயிரம் ரோஜாகளை கொண்டு பெரிய புறா வடிவமும், 16 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு தாய் யானை மற்றும் குட்டி யானை வடிவமும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்