R.S.பாரதி மகன் மீது பாஜக பரபரப்பு புகார்

Update: 2024-08-09 04:55 GMT

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துப்படம் வெளியிட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் மீது பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, எக்ஸ் தளத்தில் கருத்துப்படம் வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் மீது பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்