இந்த முறைகேடு வழக்கில், நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கமலகண்ணன் மற்றும் அவரது சகோதரருமான சிங்காரவேலன் ஆகிய இருவரும், ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்
திங்களன்று மதுரைக்கு அழைத்துவரப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவபரிசோதனை செய்த பின்னர் நீதிபதி தமிழரசி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவருக்கும் வரும் 29ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.