குலசாமி போல சார் விஜயகாந்த் - கண்ணீர் மல்க மக்கள் பேட்டி

Update: 2024-12-27 17:07 GMT

மறைந்த தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தம் வாழ்நாளில் நடிகராகவும் அரசியல் கட்சித் தலைவராகவும் எவ்வளவோ உதவிகள், யார் யாருக்கோ செய்திருக்கிறார். 2023 டிசம்பர் 28 ஆம் தேதி விஜயகாந்த் மறைவின்போது அவருடைய உதவிகள் பற்றியெல்லாம் பலரும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டனர். ஆனாலும், அவருடைய உதவிகளிலேயே பேருதவியாக, பெரிய விஷயமாகப் பேசப்பட்டது அவருடைய உணவு உபசரிப்புதான்..

ஆம்.. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, உணவு விஷயத்தில் சிறப்பிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த் என்பதை அவருடைய மறைவுக்குப் பின் பல்வேறு பிரபலங்களும், அவரால் பயன்பெற்ற மக்களும் உறுதிப்படுத்தினர்.

அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் உணவும், உபசரிப்பும் இன்றளவும் தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்