பேரதிர்ச்சியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி அழகர் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மாற்றி அளிக்கப்பட்டுள்ளதால், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மையத்தில், சுமார் 768- -மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இங்கு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பலருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலுமாக 200- கேள்விகளும் மற்ற நீட் தேர்வு மையங்களில் வழங்கப்பட்ட வினாக்களில் இருந்து மாறுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களின் எண்ணிக்கை 28- ஆகவும் தூத்துக்குடி அழகர் பள்ளியில் வழங்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள்களின் எண்ணிக்கை 32- ஆகவும் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மத்திய மாநில அரசுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை, தாங்கள் எழுதிய வினாத்தாள்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி ரேங்க் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தங்களுக்கு தனியாக நடத்த வேண்டும் என்று, மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.