ஜீவ சமாதிகளை இரவோடு இரவாக இடித்த மர்ம நபர்கள் - தி.மலை தீபத் திருவிழா நேரத்தில் அதிர்ச்சி

Update: 2023-11-21 07:25 GMT

ஜீவ சமாதிகளை இரவோடு இரவாக இடித்த மர்ம நபர்கள் - தி.மலை தீபத் திருவிழா நேரத்தில் அதிர்ச்சி

திருவண்ணாமலை அருகே இடிக்கப்பட்ட ஜீவ சமாதிகளை மீண்டும் புனரமைக்க கோரி, சித்த வித்யாதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில், காட்டு சிவா என்பவருக்குச் சொந்தமான 7 ஏக்கர் 81 சென்ட் நிலத்தில், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்த 13 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. தற்போது திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், 13 ஜீவசமாதிகளையும், ஒரு பெரிய கிணறையும் இரவோடு இரவாக இடித்து அந்த இடத்தை மர்ம நபர்கள் சமம் செய்துள்ளனர். இதையடுத்து, இடிக்கப்பட்ட சமாதிகளை மீண்டும் புனரமைத்து தரக் கோரி சிவானந்தா பரமஹம்சர் வழிவந்த சித்த வித்யாதிகள் ஆன்மிக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை உதவியுடன் அந்த நிலத்தை சிலர் அரசு நிலமாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்