சென்னையில் அரசு ஊழியர்களை தாக்கிய மதிமுக கவுன்சிலர்..? வைரல் சம்பவத்தில் மாறிய சீன் | Thanthitv
சென்னை ஈக்காட்டுதாங்கல் 100 அடி சாலையில் 167 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டு இருந்தது. நடைப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற வந்த ஊழியர்களை 139- வார்டு மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி தாக்கி தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளகளில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி கிண்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 27 ஆம் தேதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு இடையூறாக ஜேசிபி வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், அதனை எடுக்கும்படி கூறியதை யாரோ வீடியோ எடுத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.