ராமதாஸ் வீடு அருகே திடீர் பதற்றம்.. போலீஸ் சட்டையை பிடித்து இழுத்து.. விசிகவினர் மீது தடியடி

Update: 2024-03-10 08:26 GMT

திண்டிவனம் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவின்போது, பக்தர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வீடு அருகே அக்கட்சியினர் நடனமாடி வந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து வி.சி.க. கட்சியினர் நடனமாடி வந்த நிலையில், வி.சி.க.வினரை போலீசார் முன்னால் செல்லும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனிடையே மது போதையில் இருந்த தினேஷ் என்பவர் காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் தினேஷை காவல்நிலையம் அழைத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தினேஷை விடுவிக்க கோரி வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, காயம் அடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்