மாப்ள, பொண்ணு சாப்பாட்டில் கை வைத்த நொடி.. கடைசி முகூர்த்த கல்யாணத்தில் பயங்கரம்.. நெல்லையில் ஷாக்
நெல்லையில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் நெடுஞ்சாலையில் ஒவ்வொருக்கொருவர் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பைபாஸ் சாலை வண்ணார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
மதிய உணவிற்கு பின்னர் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் பேசிக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக் கொண்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பட்டு வேட்டி கட்டிக் கொண்டு சாலையில் கட்டிப்பிடித்து அடித்து உருண்டு கொண்டிருந்தவர்களைக் கண்டு வாகன ஓட்டிகள் திகைத்துப் போயினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதானம் செய்ததுடன் விசாரித்து வருகின்றனர்.