மதுரையில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டுநர் கண்டெய்னர் லாரி ஓட்டியதால், திடீரென நிகழ்ச்சி பந்தலுக்குள் லாரி புகுந்து நின்றது. சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக தெருவில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த பந்தலுக்குள் ஒரு பெரிய கண்டெய்னர் லாரி புகுந்து நின்றுள்ளது. விசாரித்ததில், ஓட்டுநர் கூகுள் மேப்-ஐ பார்த்து கவனமின்றி லாரியை ஓட்டி பந்தலுக்குள் புகுந்தது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.