மதுரையில் பற்றி எரிந்த 2 சொகுசு கார்கள்.. பரபரப்பான CCTV காட்சி

Update: 2024-09-21 04:40 GMT

மதுரை ஆனையூர் சங்கீத் நகர் 2வது தெருவைச் சேர்ந்த பாபு, தனது வீட்டு ஷெட்டில் டாட்டா சஃபாரி மற்றும் அருகில் குடியிருப்பவரின் XUV காரையும் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மதியம் திடிரென கார்களில் தீ்ப்பற்றியதோடு, கார் ஷெட் முழுவதும் மளமளவென எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் தீ விபத்தில் சுமார் 40 லட்சம் மதிப்பலான கார்கள் முழுவதுமாக எரிந்தன. வெயிலின் தாக்கத்தால் கார் தீ பற்றியதா? அல்லது மின் கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தா? என்பது குறித்தும் கூடல் புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தீவிபத்து சிசிடிவி காட்சி வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்