கள்ளழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

Update: 2024-10-29 12:18 GMT

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். கள்ளழகர் திருக்கோவில், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா வரவேற்றார். சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சௌந்தர்யாவும் அவரது கணவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அழகர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்