குட் நியூஸ்.. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது முடியும்? வெளியான சூப்பர் தகவல் |

Update: 2024-10-21 02:46 GMT

குட் நியூஸ்.. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது முடியும்? வெளியான சூப்பர் தகவல் | 

2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், மதுரை தோப்பூரில் உள்ள புதிய கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் இயங்கும் என்று அந்த கல்லூரியின் செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் கூறியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக இந்த திட்டம், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி, முதல் செங்கல்லை நட்டு வைத்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு, எல் அன்ட் டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, மருத்துவக் கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்த மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்தராவ், வரும் 2025 டிசம்பர் மாதம் முதல், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்