"24 வழக்குகள்... 50 மணி நேரம் விசாரணை.. பறிபோன இல்லம்.." - ராகுல் பரபரப்பு பேட்டி

Update: 2024-05-30 12:29 GMT

பூரி ஜெகன்னாதர் பிரதமர் மோடியின் பக்தர் எனக்கூறி பாஜக, ஒடிசாவில் உள்ள அனைவரையும் அவமதித்துவிட்டதாக ராகுல் காந்தி எம்.பி., குற்றம்சாட்டினார்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள பத்ராக் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒடிசாவில் பாஜகவும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்து பணியாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். பாஜகவை எதிர்த்து போராடி வருவதால் தன் மீது அக்கட்சி 24 வழக்குகளை பதிவு செய்திருப்பதாகக் கூறினார்.

தன்னிடம் 50 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாகவும், தன்னுடைய எம்பி பதவியை பாஜக பறித்ததுடன், அதிகாரப்பூர்வ இல்லத்தையும் எடுத்துக் கொண்டதாக ராகுல் வேதனை தெரிவித்தார். பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்பதன் மூலம் அவர்களது மனங்களில் எவ்வளவு ஆணவம் உள்ளது என சாடிய ராகுல் காந்தி, பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என கூறியதன் மூலம் ஒடிசாவில் உள்ள அனைவரையும் பாஜக அவமதித்து விட்டதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்