"கட்டு கட்டாக பணம்... உள்ளே பெரும் தலைகள்.." - பாஜக வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2024-05-23 13:35 GMT

தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் பாஜகவும், காங்கிரசும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பிரசார வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் இப்போது பாஜக "எத்தனை ஊழல்கள்...? எல்லாம் திருடர்கள்..." என தலைப்பிட்டு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில், இந்தியா கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, கெஜ்ரிவால் கேரக்டர்களை சித்தரித்து... 2 ஜி ஊழல், மாட்டு தீவன ஊழல் என அவர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறது. அனைவரும் திருடர்கள் எனவும் அவர்கள் அனைவரும் மக்களின் பணத்தை கட்டு கட்டாக எண்ணுவது போல பாஜக விடியோவை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்