நெல்லை அருகன்குளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நடந்த விழாவில், 5 ஆயிரம் மண் பானைகளில் பெருமாளுக்கு பல்வேறு வகையான இனிப்புகள் படைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணெய் தடவி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.