கோவையில் பயங்கரம்... போராடிய 30 தீயணைப்பு வீரர்கள்

Update: 2024-11-02 03:53 GMT

கோவையில் பயங்கரம்... போராடிய 30 தீயணைப்பு வீரர்கள்

கோவை கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான தேயிலை சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த நிலையில் இரவு 8 மணியளவில் அந்த கிடங்கில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியுள்ளது. 4 தீயணைப்பு வண்டியில் வந்த 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள குடோன்களும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தேயிலை மூட்டைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்