செல்போன் பார்த்தபடி டூவீலரை லாவகமாக திருடி சென்ற 'கேடி' - வெளியான சிசிடிவி காட்சிகள்
சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், இருசக்கர வாகனம் திருடப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் அண்ணாமலை நகரில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ராகவன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர், செல்போன் பார்த்தபடி வாகனத்தின் மீது அமர்ந்து, பின்னர் அந்த வாகனத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.