நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சியுள்ள நாட்கள் என் மக்களுக்காக, உங்கள் நான் பதிவிட்டுள்ளார்