"கச்சத்தீவை, ரகசியமாக..." - நெல்லையில் கண் சிவந்து மோடி சொன்ன வார்த்தை

Update: 2024-04-16 06:42 GMT

"கச்சத்தீவை, ரகசியமாக..." - நெல்லையில் கண் சிவந்து மோடி சொன்ன வார்த்தை

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவான அலையைக் கண்டு திமுகவுக்கு அச்சம் வந்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், திமுக- காங்கிரஸின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவாக்கப்பட்டது என்றும், திராவிடத்தின் பெயரால் தமிழ் கலாசாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் உயிர் நாடியான கச்சத்தீவை, ரகசியமாக தாரை வார்த்துக் கொடுத்ததை மன்னிக்க முடியாது என்றும், அது மிகப்பெரிய தேசத்துரோகம் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது என்றும், போதைப்பொருள் விற்பவர்களுக்கு எதிராக பாஜக நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தைக் கண்டும், தமிழ்நாட்டில் பாஜவுக்கு ஆதரவான அலையைக் கண்டு திமுகவுக்கு அச்சம் வந்து விட்டது என்றும், பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்