பரபரப்பாக பேசப்பட்ட ஜாபர் சேட் வழக்கில் திடீர் திருப்பம்

Update: 2024-08-24 05:06 GMT

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது .

சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றது தொடர்பான வழக்கில் தம்மீது அமலாக்கத் துறை பதிந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி

ஜாபர் சேட் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், இந்த மனு தொடர்பான சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்