ஐபோன் 16 சீரிஸ்..! வாடிக்கையாளரை கவர்ந்த 4 புதிய சிறப்பம்சம் | I Phone 16

Update: 2024-09-20 11:48 GMT

இந்தியாவில் இன்று முதல் ஐ-போன் 16 விற்பனை தொடங்கிய நிலையில், சென்னையில் உள்ள ஐ-போன் ஷோரூமில் ஃபோன் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். ஐபோன் 16 இந்திய மதிப்பில் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஐபோன் 16 Plus, 89 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஐபோன் 16 Pro, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஐபோன் 16 Pro Max, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 9ம் தேதியே தொடங்கிய நிலையில், இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்