கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் கனமழை காரணமாக மலங்கரா, பாம்பிளா, கல்லார்க்குட்டி அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி கேப் சாலையில் நிலச்சரிவு அபாயம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பாம்பிளா அணை , கல்லார்குட்டி, மலங்கரா அணைகள் திறக்கப்பட்டுள்ளதால், மூவாட்டுபுழா, தொடுபுழா மற்றும் பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.