காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-08 00:52 GMT
  • அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சி ரத்து...புதுக்கோட்டை செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு...
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்... மனித உயிர்கள் ஆடுகளை போல் வெட்டி சாய்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
  • திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு, புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்கு... சந்தனப்பேழையில் உடல் வைக்கப்பட்டு அடக்கம்...   
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு... சி.பி.ஐ. வசம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்... 
  • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்கிறது, பிரசாரம்... இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் மும்முரம்...
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள்... ஏற்கனவே தேர்தலை புறக்கணித்த நிலையில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா அறிவிப்பு...
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று கடைசி நிமிடம் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டு போட்டிகள்... சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, நெல்லை ராயல் கிங்ஸ்... மற்றொரு போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, லைகா கோவை கிங்ஸ் அசத்தல்... 
  • இன்றைய டி.என்.பி.எல். லீக் போட்டியில், திண்டுக்கல் மற்றும் சேலம் அணிகள் பலப்பரீட்சை.... சேலத்தில் இரவு 7.15 மணிக்கு போட்டி தொடங்குகிறது...
Tags:    

மேலும் செய்திகள்