"பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது" - சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பு வழக்கு

Update: 2024-10-06 04:17 GMT

மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது பாட்டிக்கு எதிராக இழிவான, அவதூறான கருத்துக்களை தெரிவித்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005 ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம் தான் விருது வழங்குவதாகவும் தெரிவித்தது. இதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து டி.எம். கிருஷ்ணா பதில் மனு தாக்கல் செய்யயுமாறு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்