கெட்டுப்போன இறைச்சியில் கிரில் சிக்கன்...வசமாக சிக்கிய ஹோட்டல் உரிமையாளர் | Thiruvannamalai

Update: 2023-09-19 17:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ உணவகங்களில், தரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக, நகராட்சிக்கு மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து காந்தி சாலையில் உள்ள அசைவ உணவகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த காலாவதியான இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்