"அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா..?" குழம்பி தவிக்கும் மதுரை மக்கள் | Madurai
"அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா..?" குழம்பி தவிக்கும் மதுரை மக்கள் ....மதுரையில் கொசு மருந்து அடிக்கும் வாகனம் போல், அரசு பேருந்து சாலையில் சென்றபோது, மற்ற வாகன ஓட்டிகள் திணறினர். மதுரை மண்டல போக்குவரத்து கழக பேருந்து ஒன்று, பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் திடீரென புகையை கக்கியது. கொசு மருந்து அடிப்பது போல சாலை முழுவதும் புகை பரவியது. இதனால், பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.