கூகுளில் வரும் ஆபாசங்கள் - வெளியான பரபரப்பு உத்தரவு | Google | Chennai HC

Update: 2024-08-07 05:53 GMT

கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில், இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்