மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பல் - பின்னணியில் இருந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-01-04 06:47 GMT

கல்லூரி மாணவர்களிடம் வலி நிவாரண மாத்திரைகளை விற்று, அவர்களை போதைக்கு அடிமையாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.சென்னையில், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்தி வருவதை போலீசார் கண்டறிந்தனர். இதனால், உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வலி நிவாரண மாத்திரைகளை கொடுக்க கூடாது என போலீசாரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு சென்னை புளியந்தோப்பு பகுதியில் 2 இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை நீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்தியதில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ், பிகாம் பட்டதாரி சீனிவாசன் மற்றும் முத்தையால் பேட்டை பகுதியை சேர்ந்த மருந்துகள் விற்பனை செய்யும் பிரதிநிதிகள் சுல்தான், அலாவுதீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கும்பல், பிரபல இணையதள மூலம் மருந்துச் சீட்டு இல்லாமலேயே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியதும், அவைகளை ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவர, கும்பலிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்