தெங்குமரகடா வனப்பகுதி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், D.பரத சக்ரவர்த்தி அமர்வு, வனப்பகுதியை மீட்டு எடுப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறியது. உடனடியாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அந்த தொகையை பெற்ற 2 மாதங்களில், தமிழக தலைமை முதன்மை வனப் பாதுகாவலருக்கு விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த தொகையில், 4 வாரங்களில் 497 குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்கி, வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை முதன்மை வன பாதுகாவலருக்கு உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அக்டோபர் 10 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.