குளிர்பானத்தால் பறிபோன குழந்தை உயிர்.. தொடர்ந்து 5 மணி நேரம்...கடைசியில் அதிகாரிகள் கொடுத்த வார்னிங்

Update: 2024-08-14 02:51 GMT

குளிர்பானத்தால் பறிபோன குழந்தை உயிர்.. தொடர்ந்து 5 மணி நேரம்... - கடைசியில் அதிகாரிகள் கொடுத்த வார்னிங்

குளிர்பானத்தை அருந்திய ஐந்து வயது குழந்தை உயிரிழந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஆலையில் ஐந்து மணி நேரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் குளிர்பானத்தை குடித்த ஐந்து வயது குழந்தை

காவ்யா மயக்கமடைந்து உயிரிழந்தார். காவ்யா குடித்த குளிர்பான நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்பாணிப்பட்டியில் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, மத்திய மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

ஆலையில் உள்ள மூலப் பொருட்கள், அவற்றால் தயாரித்து வைக்கப்பட்ட குளிர்பானங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முடிவில் ஆய்வுக்காக குளிர்பானத்தின் மாதிரிகளை எடுத்துள்ளனர். குளிர்பானத்தில் நச்சு தன்மை இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்