“Free கரண்ட்ஒரு ரூபா கூட தேவையில்லை“ - தமிழக அரசு சொல்லும் சூப்பர் பிளான்

Update: 2024-09-06 03:34 GMT

ஊரக பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் பலர் இணைந்து சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது...

மின் உற்பத்தியில் புதிதாக சிறிய புனல் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஊரக பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு நிறுவனம் அல்லது தனியார் பலர் இணைந்து சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி அமைக்கப்படும் சிறிய புனல் திட்டம்

மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியை சுய தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் உற்பத்தி செய்யும் மி்ன்சாரத்தில் 10 சதவீதத்தை அரசுக்கு இலவசமாக தரவேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்கும் நோக்கில் 100 கிலோ வாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின் உற்பத்தி திறன் கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை உருவாக்கலாம் என்றும் இந்த மின் திட்டங்களுக்கு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்