பள்ளியில் பாடம் நடத்த நேரமில்லை என்றும், கல்வித்துறையின் எமிஸ் செயலியில் 50-க்கும் அதிகமான புள்ளி விவரங்களை பதிவிடவே நேரம் கரைந்து போவதாகவும் ஆசிரியர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நகர்புறங்களில் பிரச்சினை இல்லாவிட்டாலும், கிராமப்புறங்களில் நெட்வொர்க் பிரச்சனை காரணமாக ஆசிரியர்கள், செயலியில் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களின் குமுறல்களுக்கு விரைவில் விடிவு கிடைக்கும் என்றும், பாடம் நடத்துவதற்கு போதுமான நேரத்தை ஆசிரியர்களுக்கு வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதனால், செயலியில் முக்கியமான சில தகவல்களை மட்டும் ஆசிரியர்கள் பதிவு செய்யும் வகையில், மற்ற பதிவுகளை மேற்கொள்வதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.