3 ஆண்டுகளாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை தட்டி தூக்கிய போலீசார்

Update: 2024-12-27 04:37 GMT

3 ஆண்டுகளாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை தட்டி தூக்கிய போலீசார்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே இளம்பெண்ணிற்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர், அரபு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரை கல்லூரி நிர்வாகம், 4 மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நிறுத்தியதாக தெரிகிறது. இவர் ஆடுதுறையைச் சேர்ந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் ஜியாவுதீனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்