"இத USE பண்ண எல்லா கடைகளுக்கும் சீல்.." - திடீர் ரெய்டு.. பறந்த கடும் எச்சரிக்கை
சென்னையில், பல்வேறு உணவகங்களில் 'ரோடமைன் பி' என்னும் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, நிறம் அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் தவறான முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. 'ரோடமைன் பி' இருப்பதாக சந்தேகிக்கப்படும் உணவு பொருட்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூஸ் கடை, பெட்டி கடைகள் ஆகியவற்றிலும் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. அனைத்து கடைகளிலும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சில உணவகங்களில் சுகாதாரம் இல்லாத சமையலறைகளை சீர் செய்யுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.