இரக்கப்பட்டது குற்றமா..?ஆசிரியர் `கழுத்தில்' கத்தி... சிறுவர்கள் செய்த விபரீதம் ..

Update: 2024-10-19 09:19 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்று, ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை அருகே சென்னிமலைபாளையம் பகுதியை சேர்ந்த ஷர்மா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது 17வயது சிறுவன் ஒருவன் லிப்ட் கேட்டுள்ளான். இதையடுத்து உதவி செய்த ஆசிரியர் ஷர்மா, சிறிது தூரம் சென்றவுடன் வாகனத்தை நிறுத்திய நிலையில், அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 17வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி ஷர்மாவின் கூகுள் பே மூலம் 35ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளனர். பின்னர் கையில் இருந்த அரை பவுன் தங்க மோதிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து பெருந்துறை காவல்நிலையத்தில் ஷர்மா கொடுத்த புகாரின்பேரில் போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் மற்றும் நாமக்கலை சேர்ந்த மைத்தீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், மோதிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்