சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ட்ரான்சிட பயணிகள், விமான ஊழியர்கள் செல்லக்கூடிய கேட்டில் கண்ணாடி கதவு ஒன்று, திடீரென உடைந்து நொறுங்கி ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த கேட் வழியாக யாரும் செல்லாதபடி, கேட்டை
டேப் போட்டு மூடி வைத்துள்ளனர். மேலும் பயணிகள் மாற்று வழியில், உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கண்ணாடி கதவு உடைந்தற்கான காரணத்தை கண்டறிய
விசாரணை நடத்த்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்த பழைய கட்டிடத்தில், தொடர்ச்சியாக சுமார் 90 முறை, கண்ணாடி கதவுகள் உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் புதிய முனையத்தில் கண்ணாடி கதவு ஒன்று உடைந்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் இடையே அச்சம் நிலவுகிறது.